என்னுடன் உறவு வைத்து கொண்டு பிக் பாஸ் முத்துக்குமரன் என்னை ஏமாத்திட்டாரு.. தற்கொலை முயற்சி செய்த பெண்!
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘தமிழ் பேச்சு எங்கள் மூச்சு’ நிகழ்ச்சியின் மூலம் கவனம் பெற்ற முத்துக்குமரன்.பின்னர் ‘பிக்பாஸ் தமிழ்’ சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். 105 நாட்கள் நடைபெற்ற போட்டியில் தனது பேச்சுத் திறன் மற்றும் ஆட்டத்தின் மூலம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற முத்துக்குமரன், இறுதியில் டைட்டிலை வென்று ரூ.40.5 லட்சம் பரிசுத் தொகையையும் பெற்றார்.
இன்ஸ்டாகிராமில் சுமார் 1.4 மில்லியன் ஃபாலோவர்களை கொண்ட முத்துக்குமரன் பெண்கள் மத்தியில் அதிகம் பிரலமானவர் . முத்துக்குமரன் மீது மற்றொரு இன்ஸ்டாகிராம் பிரபலமான வகிதா பேகம் என்பவர் பாலியல் குற்றச்சாட்டு வைத்து வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் " நான் கடந்த சில மாதங்களாக பிரேக் அப்பில் மனமுடைந்து இருந்தேன். அப்போது சென்னை கத்திபாராவில் எதெச்சையாக முத்துக்குமரனை சந்தித்தேன். அப்போது அவர் ரொம்ப க்யூட்டாக சில விஷயங்களை செய்தார் . என்னை அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்று அன்பையும் முத்தங்களையும் பொழிந்தார் .
நான் ஏற்கனவே கல்யாணம் முடிந்தவள் என்பது அவருக்கு தெரியும். 5 வயதில் ஒரு பையன் இருக்கிறான் பிரேக் அப்பில் இருக்கிறேன் என்பது அவருக்கு தெரியும்.2 மாதமாக நான் கஷ்டத்தில் இருந்த போது அவர் என்னிடம் பழகி இருந்தார். அப்போது ஆறுதலாக பேசிக் கொண்டிருந்தார். பிறகு அவருடைய வீட்டில் வைத்து எனக்கு 1000 முத்தம் கொடுத்தார். நிறைய காதல் கொடுத்தார். அதற்காக நான் காத்திருந்தேன். நான் காதலால் ஏமாற்றப்பட்டதால் அவருடைய காதல் எனக்கு ரொம்பவும் சந்தோஷத்தையும், மகிழ்ச்சியும் கொடுத்தது.
ஏற்கனவே ஒரு காதல் தோல்வியில் இருந்த என்னை அவர் பேசியே மயக்கிவிட்டார். நான் தாலி கட்டுகிறேன் என்று சொல்லி எக்கச்சக்க முத்தங்கள் கொடுத்தார். ஆண்களை நம்பக்கூடாது என எல்லாரிடமும் நான் சொல்லுவேன், ஆனால் நானே இப்படி ஆகிவிட்டேன். உன் விருப்பம் இல்லாமல் உன்னை தொட மாட்டேன் என்று திருப்பி திருப்பி சொன்னார். தாலி கட்டுவேன் என்று அவர் சொன்ன போது நான் நம்பி விட்டேன். ஆனால் எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறேன். போதும் சாமி... முடியவில்லை. எல்லாமே முடியப்போகிறது. இனிமேல் எனக்கு தெம்பு இல்லை என்று அந்த வீடியோவில் அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே அதிகமான மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார்
என்னுடன் உடலுறவு வைத்துக்கொண்டார். மீண்டும் அவரிடம் திருமணம் பற்றி கேட்டபோது அவர் அதைப்பற்றி பேசுவதை தவிர்த்து வந்தார். பின் தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்று கூறினார். " என கூறியுள்ளார்.
அவரது நண்பர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து தற்போது வகிதா சிகிச்சைப் பெற்று வருகிறார். மேலும் முத்துக்குமரன் உடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்றையும் வகிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் சோசியல் மீடியாவில் பெரிதாக பேசப்படும் சமயத்தில் முத்துக்குமரன் இது குறித்து ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். "நானும் வஹாதாவும் நல்ல நண்பர்கள். அவர் ஏன் இப்படி செய்தார் என்று தெரியவில்லை. அது குறித்து தான் நான் கிளாரிட்டி கேட்டிருக்கிறேன். அவர் ஏற்கனவே கொஞ்சம் டிஸ்டர்ஷனாக இருந்தார்" என்று சொல்லி இருக்கிறார்.
இந்த வீடியோ வைரல் ஆகி வரும் நிலையில் முத்துக்குமரனை பலரும் விமர்சித்து வருகிறார்கள். சோசியல் மீடியாவில் முற்போக்காக பேசும் நீங்களா இப்படி எல்லாம் பண்ணுனீங்க? உங்களை போய் அண்ணன்னு நாங்க நம்புனாமே.. என்று சில பெண்கள் அவருக்கு எதிராக கமெண்ட் கொடுக்கின்றனர்.

