இளைஞரிடம் ரூ.5லட்சம் மோசடி - பிக்பாஸ் பிரபலம் வர்ஷினி வெங்கட் கைது

 
இளைஞரிடம் ரூ.5லட்சம் மோசடி - பிக்பாஸ் பிரபலம் வர்ஷினி வெங்கட் கைது

குறும்படம் தயாரிப்பதாக கூறி ரூ.5 லட்சத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக இளைஞர் அளித்த புகாரின்பேரில் பிக்பாஸ் பிரபலம் வர்ஷினி வெங்கட் கைது செய்யப்பட்டார். 

தவெக ஆதரவளரான வர்ஷினி வெங்கட் சென்னை கிண்டி நட்சத்திர ஓட்டலில் இளைஞரை மிரட்டி ரூ.5 லட்சம் பறித்துள்ளார். பணத்தைத் திருப்பிக் கேட்டபோது இளைஞரை அழைத்து தாக்கியும், ரூ.50 ஆயிரம் மற்றும் 2 செல்போன்களை பறித்துள்ளார். குறும்படம் எடுப்பதற்கு முதலீடு செய்யக்கோரி ஏமாற்றியதாகவும் கூடுதலாக ரூ.27 லட்சம் கேட்டு மிரட்டியதாகவும் இளைஞர் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், கிண்டி போலீசார் வர்ஷினி வெங்கட், சஞ்சய் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். வர்ஷினி 7 நாட்கள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.