பிக் பாஸ்-9 நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் போலீஸ் குவிப்பு! என்ன நடந்தது?
பிக் பாஸ் நிகழ்ச்சி, இளம் தலைமுறையினரின் மனநிலையை பாதிப்பதாகவும், குடும்ப பண்பாடுகளை சீர்குலைப்பதாகவும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் முன்னரே அறிக்கை வெளியிட்டிருந்தார். நிகழ்ச்சியைத் தடை செய்யாவிட்டால், மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் எச்சரித்திருந்தார்
இந்நிலையில் "பிக் பாஸ் நிகழ்ச்சியை உடனடியாக தடை செய்ய வேண்டும்", "தமிழர் கலாச்சாரத்தை சீரழிக்கும் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும்" போன்ற முழக்கங்களை எழுப்பி, அக்கட்சியின் மகளிர் அணியினர் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான பிரம்மாண்ட அரங்கம் அமைந்துள்ள வேல்ஸ் கார்டன் படப்பிடிப்பு தளத்திற்கு அருகே உள்ள குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் பகுதியில் இந்த போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தைத் தொடர்ந்து, அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில், பிக் பாஸ் படப்பிடிப்பு அரங்கம் அமைந்துள்ள பகுதியில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

