பொண்ணு கொடுக்குறாங்க என்ன நம்பி... பிக் பாஸ் பிரபலம் அறிவித்த குட் நியூஸ்!!

 
tt tt

பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 3ல் நடிகர் கவினுக்கு நண்பராக உள்ளே வந்தவர் நடிகர் பிரதீப் ஆண்டனி . இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த அருவி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

gg

இதைத்தொடர்ந்து வாழ், டாடா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அத்துடன் பிக் பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் சில சர்ச்சைகளில் சிக்கி பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். 

gg

இந்நிலையில் பிக் பாஸ் பிரதீப் ஆண்டனிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தனது வருங்கால மனைவியுடன் எடுத்துக்கொண்ட திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதை கண்ட அவரது ரசிகர்கள் பிரதீப் ஆண்டனிக்கு தனது தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.