#BIG NEWS : தோல்விக்கான காரணம் என்ன..? குழு அமைத்த தி.மு.க..!

 
MK stalin

திமுக தலைவர் முக ஸ்டாலின் நேற்று மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில் தோல்விக்கு முழு பொறுப்பை தான் ஏற்பதாக தெரிவித்தார் ஸ்டாலின். மேலும் கட்சியில் சில மாற்றங்கள் வரும் எனவும் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து தேர்தல் தோல்வி குறித்து கள ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்துள்ளார் முக ஸ்டாலின்.

தொகுதி வாரியாக மக்களிடையே பேசி, தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளின் கருத்தை கேட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அந்த குழுவிற்கு உத்தரவு போட்டுள்ளார் முக ஸ்டாலின். அந்த கள ஆய்வு குழுவில் 35 பேர் இடம்பெற்று இருப்பதாக தகவல். ஜூன் முதல் வாரத்திற்குள் அந்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மு.க ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறாராம்.

இந்நிலையில் என்னதான் திமுக இந்த தேர்தலில் தோல்வியை சந்தித்தாலும் அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் தொடர்ந்து மக்களுக்கான பணியில் ஈடுபட்டு வருகின்றார் கொளத்தூர் தொகுதியில் தோல்வியை சந்தித்தபோதும் அத்தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்தார் ஸ்டாலின். அப்போது அத்தொகுதி மக்கள் அவரை கண்டதும் கண்ணீர் விட்டனர்.






மேலும் புதிதாக பதவியேற்று இருக்கும் அரசுக்கு சில அறிவுரைகளை வழங்கிய ஸ்டாலின் அந்த அரசின் செயல்பாடுகள் குறித்தும் விமர்சனம் செய்து வருகின்றார். தொடர்ந்து கட்சி கூட்டங்களை நடத்தி வரும் ஸ்டாலின் தோல்விக்கான காரணத்தை கண்டறிய கள ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.