#BIG NEWS : இன்று காலை 10.30 மணிக்கு 2ஜி மேல்முறையீடு வழக்கில் தீர்ப்பு..!

 
Q

மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா பதவி வகித்த போது 2ஜி அலைக்கற்றை (2ஜி ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீடு பகிரங்க ஏலம் விடாமல் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படை பின்பற்றப்பட்ட்டது. இதன் மூலம் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தினார் ஆ.ராசா என்பது மத்திய கணக்கு தணிக்கைக் குழுவின் குற்றச்சாட்டு. இதனடிப்படையில் சிபிஐ வழக்கு பதிவு செய்து ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேரை கைது செய்து சிறையில் அடைத்தது. பின்னர் அனைவரும் ஜாமீனில் விடுதலையாகினர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் 2018-ம் ஆண்டு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் குற்றவாளிகள் இல்லை என தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனியின் இந்த தீர்ப்புக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்டவை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் நிறைவடைந்துவிட்டன.

இந்த நிலையில் 2 ஜி வழக்கில் ஆ ராசா, கனிமொழி உள்ளிட்டோரை விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படுமா? இல்லையா? என்பது குறித்த தீர்ப்பு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட உள்ளது. கனிமொழி மற்றும் ஆ ராசா ஆகியோர்கள் மீதான மேல்முறையீடு வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டால் இருவருக்கும் சிக்கல் ஏற்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுக்கள் மீது இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படுகிறது.