#BIG NEWS : 2 கோடியை கடந்த த.வெ.க. உறுப்பினர் சேர்க்கை..!!
விஜய் மக்கள் இயக்கம் மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை செய்துவந்த நடிகர் விஜய், கடந்த 2024-ல் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.
இதில், கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை நடத்த வேண்டும். நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டு வரும் சிறப்பு செயலி மூலமாக, உறுப்பினர் சேர்க்கை முகாம்களை ஒருங்கிணைக்க வேண்டும். கட்சியில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தினார்.
இதற்கிடையே, த.வெ.க.வின் உறுப்பினர் சேர்க்கை தற்போது 2 கோடியை கடந்துள்ளது.
தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட கட்சிகளில் அதிக உறுப்பினர்களை கொண்ட முதல் கட்சியாக த.வெ.க. தற்போது உருவெடுத்து இருக்கிறது.
விஜய் கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி த.வெ.க. என்ற கட்சியை தொடங்கினார். கடந்த சட்டசபை தேர்தலில் முதல் முறையாக தேர்தல் களம் கண்ட த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.34.92 சதவீத வாக்குகளை அள்ளி தி.மு.க., அ.தி.மு.க. பாரம்பரிய கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்தது. இதை தொடர்ந்து கடந்த மே 10-ந்தேதி தமிழகத்தின் முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்றார். இதற்கிடையே, த.வெ.க.வின் உறுப்பினர் சேர்க்கை தற்போது 2 கோடியை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

