#BIG NEWS : ரயில் பயணிகளே கவனம்! இரவு 11 மணிக்குப் பிறகு சார்ஜிங் பாயிண்ட் இயங்காது..!!

 
Q

ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள உத்தரவு:

ரயில் பெட்டிகளில், தீ விபத்து போன்ற அசம்பாவிதங்களை தடுக்க, இரவு மொபைல் சார்ஜிங் வசதிகளை நிறுத்த, ரயில்வே வாரியம் கடந்த 2014 ஜூன் 19ம் தேதி உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவு முறையாக பின்பற்றப்படாதது, சமீபத்திய சம்பவத்தின் வாயிலாக தெரிய வந்துள்ளது.

தென்கிழக்கு ரயில்வே மண்டலத்தில், இரவு நேரத்தில் மொபைல் சார்ஜிங் பாயின்ட்கள் அணைக்கப்படாத நிலையில், பயணி ஒருவர் சார்ஜ் செய்த ‘பவர் பேங்க்’ வெடித்துள்ளது. இதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்படுகிறது.

அனைத்து ரயில்களிலும், இரவு 11:00 மணி முதல் அதிகாலை 5:00 மணி வரை, மொபைல் சார்ஜிங் பாயின்ட்கள் கட்டாயம் அணைக்கப்பட்டிருக்க வேண்டும். இதில் எந்த விதிவிலக்கும் அளிக்கக் கூடாது.

இந்த நடைமுறையை உறுதி செய்ய, சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு, உரிய பயிற்சி மற்றும் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். மேலும், அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள், திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு, உத்தரவு முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது