#BIG NEWS : தமிழகத்தை உலுக்கிய சம்பவம்.. மேலும் ஒரு உயிர் பிரிந்தது..!!

 
Q

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை அடுத்த முதலூரைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இவரது மனைவி மேரி ரெஜிலா. இந்தத் தம்பதியினருக்கு பிளஸ்ஸி, பிரின்ஸா பாப்பா, பிளஸெட் ராஜா ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இவர்களது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், குடும்பத்தினரைச் சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் மேரி ரெஜிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது கணவர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் மகன் பிளஸெட் ராஜா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். 

இந்த சம்பவத்தில் கடத்தி சென்ற இரண்டு பெண்குழந்தைகளையும் காவல்துறையினர் மீட்டு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடத்தப்பட்ட விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே 15 வயது சிறுமியை காதலித்த விவகாரத்தில் சிறுமியின் தாய் மேரி ரெஜிலாவை, ஞானப்பிரகாஷ் (26) என்ற பரோட்டா மாஸ்டர் வீடு புகுந்து வெட்டிக்கொலை செய்தார். மேலும் சிறுமியின் தந்தை மற்றும் சகோதரனை அரிவாளால் வெட்டிவிட்டு இரண்டு சிறுமிகளை கடத்திச்சென்ற நிலையில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த தந்தை முத்துகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சகோதரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.