#BIG NEWS : தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் தள்ளிப்போகும் - அமைச்சர் தகவல்..!!
தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் தள்ளிப்போகும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் விஜய் வெளிநாடு செல்வதால் திட்டம் தள்ளிப்போகிறது. எப்போது தொடங்கப்படும் என விரைவில் அறிவிக்கப்படும் என கூறினார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவை, அமைச்சர் அருண் ராஜ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இதைதொடர்ந்து, செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
குழந்தைகளுக்கு அதிகளவு தேவைப்படுவதால் போன் மாரோ (Bone Marrow) தானம் செய்ய முன்வரவேண்டும் என அமைச்சர் அருண்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.எலும்பு மஜ்ஜை தானம் செய்ய தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனையிலும் அதற்கான பதிவு தொடங்கப்பட உள்ளது.
ரத்த தானம், கண் தானம்போல் ஸ்டெம்செல் தானத்திற்கான முன்பதிவும் தொடங்கப்பட உள்ளது.தமிழ்நாட்டு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள பிரச்சனை சரி செய்யப்படும், தரம் உயர்த்தப்படும்.
தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் உள்ள தங்கத்தில் எவ்வித குறையும் இருக்காது.முறையாக சோதனை செய்த பின்னரே தங்க மோதிரம் திட்டத்திற்கு தங்கம் அனுப்பப்படும்.தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் தரப்படும் மோதிரத்தையும் பயனாளர்கள் சோதனை செய்து கொள்ளலாம்.
தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் வரும் 15ம் தேதி தொடங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் காரணமாக தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்குவது தள்ளிப்போகிறது.ஏற்கனவே நிர்ணயித்த தேதியில் திட்டத்தை தொடங்க முடியவில்லை. இத்திட்டம் தொடங்கும் தேதி குறித்து அதிகாரப்பூர்வமாக பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

