#BIG NEWS : தமிழகத்தில் இன்று வெளியாகிறது இறுதி வரைவு வாக்காளர் பட்டியல்..!

 
voters

பீகாரை தொடர்ந்து, தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த நவம்பர் 4ஆம் தேதி எஸ்ஐஆர் பணிகள் தமிழகத்தில் தொடங்கியது. எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகு வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 97 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டு, 5.43 கோடி வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்களுக்காகவும், புதிதாக 18 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்காகவும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இதன் மூலம் இதுவரை நேரடியாகவும், இணையதளம் மூலமாகவும் இதுவரை 34.75 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்ததுள்ளது. மேலும், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17 அன்று வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பிப்ரவரி 23 ஆம் தேதி இறுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டிற்கு பிறகு 2025 ஆம் ஆண்டு மீண்டும் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த அக்டோபர் 27 -ம் தேதி தேதி வரையில் 6.41 கோடி வாக்காளர்கள் தமிழகத்தில் இருந்தனர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தொடர்ந்து வெளிவந்த முதல் கட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம்பெற்றிருந்தனர் மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்கள் இந்த தீவிர திருத்த பணியாள் நீக்கப்பட்டு இருந்தனர்.

இந்த சூழலில்தான் கடந்த டிசம்பர் 19 -ஆம் தேதி முதல் கட்ட பட்டியல் வெளியானது. இதில் இருந்த குளறுபடிகள் பூத் முகவர்கள் மூலம் சரி செய்யும் பணியும் நிறைவடைந்தது. இந்த சூழலில்தான் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று காலை 10 மணிக்கு வெளியாக உள்ளது. தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மாநிலம் முழுக்க உள்ள வாக்காளர் பட்டியலை வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.