#BIG NEWS : சட்டமன்ற நேரலைக்கு தனியாரிடம் டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு..!!

 
Q

ஜனவரி 2027 முதல் டிசம்பர் 2028-ம் ஆண்டு வரை சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்ய டெண்டர் கோரியுள்ளது தமிழக அரசு.

தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகளைத் தடையின்றி நேரலை செய்வதற்காகத் தனியார் நிறுவனத்துடன் 2 ஆண்டு கால ஒப்பந்தத்திற்கான டெண்டர் அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் 2027 ஜனவரி முதல்2028 டிசம்பர் வரை மொத்தம் 160 நாட்கள் நடைபெறும் சட்டமன்ற நடவடிக்கைகளை முழுமையாக நேரலை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள் சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக அறிந்து கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற நேரலையை ஏராளமான மக்கள் தொலைக்காட்சி, செல்போன்களில் பார்த்தனர். மக்களிடையே அமோக வரவேற்பும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.