#BIG NEWS : தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட் அனுமதி..!

 
1

மதுரையில் கடந்த ஆண்டு கார்த்திகை தீப நாளில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், உச்சிப் பிள்ளையார் கோயில் அருகேதான் தீபம் ஏற்றப்பட்டது. இதனால் மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. பின்னர் தனி நீதிபதியின் உத்தரவை உயர் நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு உறுதி செய்தது. மேலும் ஆண்டுதோறும் திருக் கார்த்திகை நாளில் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மதுரையில் கடந்த ஆண்டு கார்த்திகை தீப நாளில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், உச்சிப் பிள்ளையார் கோயில் அருகேதான் தீபம் ஏற்றப்பட்டது. இதனால் மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. பின்னர் தனி நீதிபதியின் உத்தரவை உயர் நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு உறுதி செய்தது. மேலும் ஆண்டுதோறும் திருக் கார்த்திகை நாளில் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அப்போது, மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன் வாதிடுகையில், ‘‘தர்கா அருகே உள்ள கல்தூண் தீபத்தூண் கிடையாது. அது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நிலங்களை அளவீடு செய்வதற்காக அமைக்கப்பட்ட எல்லைக் கல்’’ என்றார்.

மேலும், தமிழகத்தின் பல்வேறு மலைப் பகுதிகளிலும் இதுபோன்ற நில அளவீட்டுக் கற்கள் உள்ளன. திருப்பரங்குன்றத்தில் உள்ள கல்தூணும் இன்று வரை நில அளவீட்டுக் கல்லாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. கல்தூண் பகுதிக்குச் செல்வதற்கான வழி தர்கா நிர்வாகத்துக்குச் சொந்தமானது என்றும் அவர் வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், ‘‘அந்தக் கல்தூண் அமைந்துள்ள இடம் கோயில் நிர்வாகத்துக்குச் சொந்தமானதா, இல்லையா?’’ என்று நேரடியாகக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, ‘‘அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிவிக்கிறோம்’’ என்று மாவட்ட ஆட்சியர் தரப்பு வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் கூறினார். இந்த பதிலில் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், ‘‘மாவட்ட ஆட்சியர் என்ற முறையில், அந்த இடம் கோயிலுக்குச் சொந்தமானதா இல்லையா என்பதை ஒரே வார்த்தையில் கூறுங்கள்’’ என்று மீண்டும் வலியுறுத்தினர்.

இதையடுத்து, வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், ‘‘அந்த இடம் கோயில் நிர்வாகத்துக்குச் சொந்தமானதுதான்’’ என்று தெரிவித்தார்.

அதன்பின்னர், சிக்கந்தர் தர்கா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹசீஃபா அகமதி, ‘‘மன்னர்கள் காலம் தொடங்கி ஆங்கிலேயர் ஆட்சி மற்றும் இந்திய அரசாங்கத்தின் காலம் வரையிலான ஆவணங்களில் தர்காவுக்குச் சொந்தமான நிலங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, 1862 முதல் 1923-ம் ஆண்டு வரையிலான உத்தரவுகள் தற்போதைய வழிபாட்டு நடைமுறைகளை உறுதிப்படுத்துகின்றன. நெல்லித்தோப்பு முதல் தர்கா வரையிலான பகுதி, படிக்கட்டுகள், தர்கா அமைந்துள்ள இடம் மற்றும் கொடியேற்றும் பகுதி ஆகியவை தர்காவுக்குச் சொந்தமானவை’’ என்றார்.

மேலும், கல் தூணுக்கும் தர்காவுக்கும் 20 மீட்டர் தொலைவுதான் உள்ளது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவால் எங்களது தரப்புதான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த தீர்ப்புக்குத் தடை விதிக்க வேண்டும்’’ என்று ஹசீஃபா வலியுறுத்தினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘இடைக்கால உத்தரவு தொடர்பான வாதங்களை அனைத்து தரப்பினரும் சுருக்கமாக முன்வைக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர். அத்துடன் வழக்கு விசாரணையை இன்று (19-ம் தேதி) பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில்,திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் வரும் கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஆண்டு கார்த்திகை தீபத்தன்று மட்டும் ஒருநாள் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தீபத்தூணில் தீபம் ஏற்றும் குழுவினரை மதுரை மாவட்ட ஆட்சியர் தேர்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிகழ்வின்போது திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:

* திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் நவ.,24ல் ஒரு முறை மட்டும் கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கப்படுகிறது.

* தேவஸ்தானத்தின் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமே தீபம் ஏற்றச் செல்லலாம்; பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

* கோஷம் போடக்கூடாது; கூட்டமாக செல்லக்கூடாது.

* பாதுகாப்பு தேவைப்பட்டால் மத்திய படைகளை பயன்படுத்தலாம்.

* தீபம் ஏற்றிய அறிக்கையை மதுரை கலெக்டர் தாக்கல் செய்ய வேண்டும்.

* இந்த ஒருமுறை அனுமதியை, அந்த இடத்தில் தீபம் ஏற்றுவது பாரம்பரிய வழக்கம் என்பதற்கான ஆதாரமாகவோ, அடுத்தடுத்த ஆண்டுகளில் உரிமை கோருவதற்கோ எந்தத் தரப்பினரும் பயன்படுத்தக் கூடாது.

* தீபம் ஏற்றும் குழுவில் எத்தனை பேர் இடம் பெற வேண்டும் என்பதை மாவட்ட கலெக்டர் முடிவு செய்ய வேண்டும். கோவில் செயல் அலுவலர், இந்திய தொல்லியல் துறை, போலீஸ் கமிஷனருடன் இணைந்து மாவட்ட கலெக்டர் முடிவு செய்யலாம்.

இந்த உத்தரவு, இந்த ஆண்டில், ஒரு முறை மட்டுமே செயல்படுத்தக்கூடிய உத்தரவு; இதை இறுதி உத்தரவாக கருதக்கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

தீபத்துாணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கக்கூடாது என்ற தமிழக அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்துள்ளது.