#BIG NEWS : போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்க தடை? - சுற்றறிக்கையை வாபஸ் பெற்றது தமிழக அரசு!

 
1

கம்யூனிஸ்ட் கட்சிகள், கரப்பான் கட்சியினர் நடத்தும் போராட்டங்களில் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்காமல் தடுக்க வேண்டும் என அரசு கல்லுாரி முதல்வர்களுக்கு தமிழக அரசு உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.

டில்லியில் நடந்த போராட்டத்தில் சமூக விரோதிகள், குற்றப்பின்னணி கொண்டவர்கள் கலந்து கொண்டு கலவரம் செய்தனர். அதன் தொடர்ச்சியாக, தமிழகத்திலும் இத்தகைய பின்னணி கொண்ட நபர்கள் போராட்டங்களை தொடங்கினர். அதில் பங்கேற்ற கல்லுாரி மாணவ, மாணவியருக்கு மூளைச்சலவை செய்யும் வேலையும் நடந்தது.இத்தகைய தவறான செயல்பாடுகளை புரிந்து கொண்ட தமிழக அரசின் உயர்கல்வித்துறை, கிளர்ச்சிகளில் மாணவர்கள் பங்கேற்காமல் தடுக்கும் வகையில் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது.

அதில் கூறியிருப்பதாவது: இடதுசாரிக் கட்சிகள் மற்றும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் போலீசார், மாவட்ட நிர்வாகத்தினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அனைத்து அரசுக்கல்லுாரி முதல்வர்களுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. இது பற்றிய தகவல் வெளியானதும், தவெக அரசை ஆதரிக்கும் இடதுசாரிக் கட்சிகளும், சில லெட்டர்பேடு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, 17ம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையை அரசு 19ம் தேதி இன்று வாபஸ் பெற்றுள்ளது.