#BIG NEWS : ஹோர்முஸ் ஜலசந்தி 'டிரம்ப் ஜலசந்தி' எனப் பெயர் மாற்றம்..??
மேற்கு ஆசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, ஈரான் உலக கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியுள்ளது.
இந்த பாதையை பயன்படுத்தும் கப்பல்களிடம் இருந்து கட்டணங்கள் வசூலிக்க ஈரான் பார்லிமென்ட் ஒப்புதல் வழங்கியது. இதற்கு அமெரிக்காவும் மற்ற சர்வதேச நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சட்டவிரோத வசூலை அனுமதிக்க முடியாது கூறி வருகிறது. இதனால் அந்த வழித்தடத்தில் இயல்பான கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியின் பெயரை மாற்றலாம் என்று பரிந்துரைக்கும் ஒரு பதிவை, அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தியை 'டிரம்ப் ஜலசந்தி' என்று பெயரிட்ட ஒரு வரைபடத்தை தன் சமூக வலைதளத்தில் அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார். இது, இணையத்தில் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்திக்குத் தன் பெயரைச் சூட்டப் பரிந்துரைத்ததற்காக விமர்சனங்களை எதிர்கொள்கிறார்; இது, அவர் மெக்சிகோ வளைகுடாவிற்குச் செய்த சர்ச்சைக்குரிய பெயர் மாற்றத்துடன் ஒப்பிடப்படுகிறது.

