#BIG NEWS : முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா..!!
கர்நாடகாவில் கடந்த, 2023 சட்டசபை தேர்தலில், மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் தலைமையில், 135 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது.
சித்தராமையா முதல்வராகவும், டிகே சிவகுமார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர்.
வெற்றிக்கு இருவருக்கும் முக்கிய பங்கு உள்ளதாலும், இருவரும் தங்களுக்கென தனி செல்வாக்கு கொண்டுள்ளதாலும் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் போட்டி நிலவியது.
இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி என, கட்சி மேலிடம் ஒப்பந்தம் போட்டிருப்பதாக கூறப்படுகிறது. சித்தராமையா முதல்வராக பதவி ஏற்று மூன்றாண்டுகள் ஆகிவிட்டது. ஒப்பந்தப்படி அவர் பதவி விலகுவாரா அல்லது நீடிப்பாரா என்ற குழப்பம் நீடித்து வந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் டில்லி சென்ற சித்தராமையா மற்றும் சிவகுமாரிடம் மேலிட தலைவர்கள், 7 மணி நேரம், ஆலோசனை நடத்தினர். ராகுலுடன் நடத்திய ஆலோசனைக்கு பின், முதல்வர் பதவியை விட்டு கொடுக்க சித்தராமையா முன்வந்தார்.
இன்று காலை 10:30 மணிக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து, தன் ராஜினாமா கடிதத்தை, சித்தராமையா வழங்க உள்ளார். அதற்கு முன், அமைச்சர்களுக்கு தன் இல்லத்தில் காலை உணவு விருந்து கொடுக்கிறார். இதில் சிவகுமாரும் பங்கேற்கிறார்.
விருந்து முடிந்ததும் அமைச்சர்கள் புடைசூழ, கவர்னர் அலுவலகத்திற்கு சென்று, சித்தராமையா தன் ராஜினாமா கடிதத்தை வழங்குகிறார்.

