#BIG NEWS : பொதுமக்கள் ஷாக்..!! ஆவின் பால் பொருட்கள் விலை அதிரடி உயர்வு..!!
தமிழ்நாடு அரசின் பால்வளத் துறையின் கீழ் செயல்படும் ஆவின் நிறுவனம் மூலம் தரமான பால் மற்றும் பால் பொருட்கள் குறைந்த விலையில் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
ஆவின் நிர்வாகம் பால் கொள்முதல் செய்து உபபொருட்களாக தயிர், நெய், பட்டர், பிஸ்கட்ஸ், பால்கோவா, குளிர்பானங்கள், முறுக்கு ஆகியவற்றை தயாரித்து விற்று வருகிறது.
இந்நிலையில் ஆவின் தயாரிப்புகளான நெய், பட்டர், பால்கோவா விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நெய் லி.,க்கு ரூ.80 உயர்த்தி ரூ.780 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விலை உயர்வு நாளை(அக்.,28) முதல் அமலுக்கு வர உள்ளதாக ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விலை உயர்வால் ரூ.700க்கு விற்ற ஒரு லி., ஆவின் நெய் ரூ.780க்கும், ரூ.365க்கு விற்ற 500 மி.லி., 400க்கும், ரூ.160க்கு விற்ற 200 மி.லி., ரூ.180க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. ரூ.30க்கு விற்றமிலக் ஷேக் ரூ.35க்கும், ரூ.35க்கு விற்ற 500 மி.லி., தயிர் ரூ.40, ரூ.140க்கு விற்ற 250 கிராம் மைசூர்பா ரூ. 160 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
100 கிராம் வெண்ணெய் ரூ.10 உயர்ந்து ரூ.70 ஆகவும், அரை கிலோ வெண்ணெய் ரூ.45 உயர்ந்து ரூ.320 ஆகவும் உயர்ந்துள்ளது.
250 கிராம் குலோப்ஜாமுன் ரூ.15 உயர்ந்து ரூ.115 ஆகவும், பால்கோவா ரூ.20 உயர்ந்து ரூ.150 ஆகவும், 250 கிராம் மைசூர்பா ரூ.160 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ரசகுலா 200 கிராம் ரூ.95-க்கு விற்பனையாகும்.
அன்றாடம் பயன்படுத்தப்படும் 200 மி.லி லெஸ்ஸி ரூ.3 அதிகரித்து ரூ.23 ஆகவும், 10 வகையிலான மில்க் ஷேக்குகளின் விலை ரூ.30-லிருந்து ரூ.35 ஆகவும் உயர்ந்துள்ளது.
500 மி.லி தயிர் ரூ.40 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 200 மி.லி மோர் ரூ.8-லிருந்து ரூ.10 ஆகவும், பெட் பாட்டிலில் விற்கும் மோர் ரூ.14 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

