#BIG NEWS : ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு..!
Jul 28, 2026, 14:32 IST1785229379046
ஜப்பானின் குமாமோட்டோ (Kumamoto) நகரை 7.1 ரிக்டர் நிலநடுக்கம் உலுக்கியிருக்கிறது.சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பானிய வானிலை ஆய்வகம் தெரிவித்தது. 1 மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலைகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டின் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் க்யூஷா தீவில் குமாமடோ நகரை மையமாக கொண்டு 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.1 ஆக ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின.
நிலநடுக்கத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.

