#BIG NEWS : கிரானைட் நிறுவன உரிமையாளர் வீரமணி கைது..!!
ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி கைது செய்யப்பட்டார்.
போலீசார் தரப்பில் கூறியதாவது; கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் சமூக ஆர்வலர் ஒருவர், சென்னை காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் பென் டிரைவ் ஒன்றை கொடுத்தார். அதில், சிறுமி ஒருவருக்கு, ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளர் வீரமணி பாலியல் துன்புறுத்தல் அளிக்கும் வீடியோ இருப்பதாக தெரிவித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதில், பென் டிரைவில் உள்ள வீடியோவில் சிறுமியுடன் இருப்பது தொழிலதிபர் வீரமணி தான் என்பது உறுதி செய்யப்பட்டது. இவர் தேனாம்பேட்டையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதை சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோரின் பொறுப்பில் விட்டுள்ளார்.
இந்த வீட்டில் பல சிறுமிகளை வரவழைத்து பாலியல் குற்றத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அப்படி, வரவழைக்கப்பட்ட ஒரு சிறுமியுடன் இருந்த வீடியோ ஆதாரம் தான் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து, வீரமணியின் வீடுகள் மற்றும் அலுவலகங்களை சோதனை செய்ததில், பல சிறுமிகள் மற்றும் பெண்களின் போட்டோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதன்பேரில், முக்கியக் குற்றவாளியான தொழிலதிபர் வீரமணி, குற்றங்களுக்கு உறுதுணையாக இருந்த சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

