#BIG NEWS : இனி 14 கிலோ சிலிண்டர் கிடையாது... வெறும் 10 கிலோ தான்! இல்லத்தரசிகளுக்குப் புதிய ஷாக் கொடுத்த மத்திய அரசு!
மேற்காசியப் போர் பதற்றம் எதிரொலியாக இந்தியாவில் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கெனவே சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு வழங்கப்படும் எல்பிஜி (LPG) சிலிண்டர்களின் அளவை தற்காலிகமாக குறைக்கும் திட்டத்தை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது வீடுகளுக்கு வழங்கப்படும் 14.2 கிலோ எடையுடைய எல்பிஜி சிலிண்டர்களில், 10 கிலோ அளவிளான எரிவாயு மட்டுமே நிரப்பி விநியோகம் செய்யலாம் என் திட்டத்தை மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம், குறைந்தளவில் உள்ள எரிவாயு கையிருப்பை அதிகப்படியான குடும்பங்களுக்கு பகிர்ந்து வழங்க முடியும் என்பதை இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமாக உள்ளது.
எண்ணெய் நிறுவனங்களின் மதிப்பீட்டின்படி, ஒரு சாதாரண 14.2 கிலோ சிலிண்டர் ஒரு குடும்பத்திற்கு 35 முதல் 40 நாட்கள் வரை பயன்படும். இதேபோல், 10 கிலோ சிலிண்டர் சுமார் ஒரு மாதத்திற்கு போதுமானதாக இருக்கும். இதனால், குறைந்த கையிருப்புகளுடன் கூட அதிக வீடுகளுக்கு விநியோகம் தொடர முடியும் என கணக்கிட்டு உள்ளது.
எரிவாயு விநியோக நிலைமை குறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சக இணை செயலாளர் சுஜாதா சர்மா கூறுகையில் 'நிலைமை கவலைக்கிடமாக உள்ளது' என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அதே சமயம், வீடுகளுக்கு விநியோகம் வழக்கம்போல நடைபெறுகிறது என அரசு தெரிவித்துள்ளது.

