#BIG NEWS : பிரதமர் பதவியை இழக்கிறார் நெதன்யாகு..!!
இஸ்ரேல் பார்லிக்கு நடந்த தேர்தலில், தற்போதைய பிரதமர் நெதன்யாகுவின் கூட்டணிக்கு 53 இடங்கள் கிடைத்துள்ளன.
ஐசென்காட் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி 48 இடங்களை பெற்றன. அரபு கட்சிகளின் கூட்டணியான ஜாயின்ட் லிஸ்ட் 11 இடங்களிலும், ரா-அம் 8 இடங்களிலும் வென்றன.
யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சியைப் பிடிக்க நெதன்யாகுவும், ஐசென்காட்டும் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். புதிய அரசை அமைப்பதில் ஜாயின்ட் லிஸ்ட் கூட்டணி கிங் மேக்கராக உருவாகியுள்ளது.
இஸ்ரேலின் புதிய பிரதமராவதற்கு ஐசென்காட்டிற்கு அரபு கட்சிகள் கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது. இதன்மூலம், எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் பலம் 67ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே, நெதன்யாகுவிற்கு ஆதரவு அளித்து வந்த யுனைடெட் தோரா ஜூடாயிஸம் என்ற கூட்டணி கட்சி தனது ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டது.
7 இடங்களில் அந்தக் கட்சி வென்றுள்ளது. இது நெதன்யாகுவுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது. அரபு கூட்டணி கட்சிகளின் முடிவால் இஸ்ரேலின் புதிய பிரதமராக ஐசென்காட் தேர்வாக அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
இஸ்ரேலில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக 8ம் தேதி அழைப்பு விடுக்க இருப்பதாக அதிபர் ஐசக் ஹெர்ஷோக் தெரிவித்துள்ளார்

