#BIG NEWS : ஆணவ படுகொலைக்கு தனி சட்டம் இயற்றப்படும் - அமைச்சர் வன்னி அரசு..!
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தில் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த (மே 29) மாலை நெட்டூர் கிராமத்தில் பிரதான சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் சிலரை முகமூடி அணிந்து இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியுள்ளது. அதே பகுதியில் வேறு ஒரு இடத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் உணவருந்திக் கொண்டிருந்த சிலரை அதே முகமூடி கும்பல் அரிவாளால் சரமாரியாகத் தாக்கியது.
இந்த சம்பவங்களில் ஆறு பேருக்கு கை, கால்கள் உள்ளிட்ட பகுதிகளில் அரிவாள் வெட்டு விழுந்தது. காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு நெட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதில் நான்கு பேர் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றன.
இந்நிலையில், நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வன்னி அரசு, பாதிக்கப்பட்ட சகோதர்களை முதலமைச்சர் விஜய் வழிகாட்டுதலின் பேரில் சந்தித்தோம். பாதிக்கப்பட்டவர்கள் வலியும், வேதனையும் எங்களுக்கு தெரியும். இது தொடர்ந்து நடக்க கூடாது என்பது தான் இந்த அரசின் நிலைப்பாடு. வெட்டுப்பட்டு மிகவும் பாதிப்பிற்குள்ளாகியுள்ள ராம் குமார் குடும்பத்திற்கு முதல் தவணையாக 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளோம்.
இந்த சம்பவம் குறித்து முதமைச்சர் விஜய்யிடம் பேசி அவருடைய வழிகாட்டுதலின் பேரில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வோம். சமூக நல்லிக்கணம், எல்லோருக்குமான பாதுகாப்பு இருக்க வேண்டும் என்பதை கட்டாயம் முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வோம். எங்களுக்கு அமைச்சரவையை விட சமூக நீதியும், சமூக நல்லிணக்கமும், ஒற்றுமையும் தான் முக்கியம். வரும் கூட்டத் தொடரில் ஆணவ படுகொலைக்கு தனி சட்டம் கொண்டு வருவது குறித்து கட்டாயம் பேசுவேன் என்றார்.

