#BIG NEWS : முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மம்தா மறுப்பு..!!
மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 23, ஏப்ரல் 29 என இரண்டு கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்து மே 4 முடிவுகள் வெளியானது.
பாஜக 207 இடங்களில் வெற்றி பெற்று அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. ஆளும் கட்சியாக இருந்த திரிணமுல் காங்கிரஸ் 80 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை இழந்துள்ளது. காங்கிரஸ் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
முதலமைச்சர் மமதா பானர்ஜி தனது பவானிபூர் தொகுதியில் பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரியிடம் 15,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
இந்நிலையில் தான் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் என்று கூறியுள்ளார்.
“நான் தோற்றிருந்தால், ராஜினாமா செய்திருப்பேன். ஆனால், அழுத்தத்திற்குப் பணிந்து நான் பதவி விலகுவேன் என்று யாராவது நினைத்தால், அது நடக்கவே நடக்காது. தார்மீக ரீதியாக நாங்கள் வெற்றி பெறிருக்கிறோம். தேர்தல் முடிவு அதிகார பலத்தால் பயமுறுத்தி அல்லது மாற்றப்பட்டிருக்கிறது.
தங்கள் கட்சியின் தேர்தல் போட்டி பாஜக-விற்கு எதிரானது அல்ல, மாறாக பாஜகவிற்காகப் பணியாற்றிய தேர்தல் ஆணையத்திற்கு எதிரானது.
வாக்கு எண்ணிக்கையில் பெருமளவில் முறைகேடுகள் நடந்திருக்கிறது. கிட்டத்தட்ட 100 தொகுதிகளில் மக்களின் தீர்ப்பு ‘சூறையாடப்பட்டிருக்கிறது.
நேற்று நடந்தவற்றை வரலாறு ஒரு இருண்ட அத்தியாயமாக நினைவில் கொள்ளும். தேர்தல் ஆணையத்தின் போக்கை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்; அது ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டதாகவே நாங்கள் நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.

