#BIG NEWS : கரூர் துயர சம்பவம்.. DSP மற்றும் 18 போலீசாருக்கு பேரிடி.. அதிரடி மாற்றம்..!!

 
Karur stampede

கரூர் துயர சம்பவம் நிகழ்ந்த போது பணியில் இருந்த டி.எஸ்.பி செல்வராஜ் உள்ளிட்ட 19 போலீசார் பணியிடமாற்றம்..கரூர் மாவட்டத்தில் பணிபுரிந்த டிஎஸ்பிகள் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் வேறு மண்டலங்களுக்கு இடம் மாற்றம்.

 கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் தனிப்பிரிவு ஆய்வாளர் மணிவண்ணன், கரூர் நகர ஆய்வாளர் அருண்பிரகாஷ் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தனிப்பிரிவு எஸ்எஸ்ஐ, தலைமைக் காவலர்கள் என 5 பேர் தெற்கு மண்டத்தில் இருந்து வடக்கு மண்டலத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அதேபோல் கரூர் மாவட்டத்தில் 3 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் கடலூர் மாவட்டம் மனித உரிமை, சமூக நீதி டிஎஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரவக்குறிச்சி டிஎஸ்பி அப்துல் கபூர் தர்மபுரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மொத்தமாக 17 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாற்றப்பட்ட பெரும்பாலான காவல் அதிகாரிகள் கரூர் சம்பவம் நடந்தபோது பணியில் இருந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது அங்கு பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.