#BIG NEWS : 'சண்டியர்' பட விவகாரம் : கமல்ஹாசனுக்கு பகிரங்க எச்சரிக்கை..!

 
1

'சண்டியர்' பட டைட்டில் விவகாரத்தில் உறுதிக்கு மாறாக நடிகர் கமல்ஹாசன் செயல்பட்டு வருவதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். 


கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய  புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட ஒரு படத்தின் டைட்டிலை மீண்டும் பயன்படுத்துவது தவறு. எதிர்ப்பை மீறி இப்படத்தை தமிழ்நாட்டில் எடுக்கவும் முடியாது, ஓட்டவும் முடியாது. யாரோ தவறாக கமல்ஹாசனை வழிநடத்தி வருகிறார்கள். 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 'சண்டியர்' பட டைட்டிலை வைத்துள்ளார் என்று சாடியுள்ளார்.


அரிவாள் கலாச்சாரம் மேலோங்கும், சாதி கலவரம் ஏற்படும் என்று கூறி கமல்ஹாசனின் படப்பிடிப்பை நடத்த விடமாட்டோம் என்று எச்சரித்ததால், அப்போது படத்தின் பெயரை விருமாண்டி என்று மாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

விருமாண்டி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டாலும் விரும்பிய இடத்தில் படப்பிடிப்பை நடத்த இயலாமல் செட்டுக்குள் முடிக்க வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டது. இதனால் கலாச்சாரம் குறித்த தனது ஆதங்கத்தை அப்போதே வீடியோ மூலம் வெளிப்படுத்தினார் 'சண்டியர்' கமல்ஹாசன்..!

இந்த நிலையில் 22 ஆண்டுகள் கழித்து, வீரதீர சூரன் படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்திற்கு சண்டியர் என்று பெயர் வைத்து தன்னுடைய கனவுக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளார் கமல்ஹாசன்.