#BIG NEWS : இன்று 22% உயர்ந்த ஜியோ பங்குகளின் மதிப்பு..!
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் பங்குகள் இன்று காலை 10 மணி அளவில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டன. நிறுவனத்தின் ஐபிஓ வெளியீட்டு விலையான ரூ.1,119-ஐ விட 21.4% அதிகமாக, ஒரு பங்கு ரூ.1,358 என்ற விலையில் பட்டியலிடப்பட்டது. இந்த வலுவான தொடக்கத்தின் மூலம், சுமார் ரூ.12.6 லட்சம் கோடி சந்தை மூலதனத்துடன், இந்தியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் இரண்டாவது அதிக மதிப்புள்ள நிறுவனமாக ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் உருவெடுத்துள்ளது.
ஐபிஓவில் பங்குகளைப் பெற்ற முதலீட்டாளர்கள், பங்குகள் பட்டியலிடப்பட்ட முதல் நாளிலேயே கணிசமான லாபத்தைப் பெற்றுள்ளனர். பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நாளில் ஜியோ பங்குகள் மதிப்பு சுமார் 22% உயர்ந்துள்ளன. இதனால் முதல் நாளிலேயே முதலீட்டாளர்களுக்கு லாபம் கிடைத்துள்ளது. சந்தை மதிப்பில் இந்தியாவின் 2வது பெரிய நிறுவனமான ஜியோ, ரூ.12.51 லட்சம் கோடியுடன் ஏர்டெல்லை பின்னுக்குத் தள்ளியது. ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டபோது, பிஎஸ்இ சந்தையில் நிறுவனத்தின் சந்தை மூலதனம் சுமார் ரூ.12.51 லட்சம் கோடியாக இருந்தது. இதன் மூலம் பார்தி ஏர்டெல் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியாவின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
இந்தியாவின் மிகப்பெரிய பட்டியலிடப்பட்ட நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.15.90 லட்சம் கோடியாக உள்ளது. ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் பங்குச் சந்தை அறிமுகம், ரிலையன்ஸ் குழுமத்தின் சந்தை ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. குறிப்பாக, தாய் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்திலும், ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் இரண்டாவது இடத்திலும் இருப்பது கவனம் பெற்றுள்ளது.

