#BIG NEWS :ஏர் இந்தியா விமானத்தைக் கடத்த முயற்சியா? அவசரமாக தரையிறக்கம்..!!

 
air india

ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் நகரில் இருந்து டெல்லி வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்திற்கு அச்சுறுத்தல் என அதிர்ச்சிக்குள்ளான தகவல் வெளியாகியுள்ளது.விமானத்தைக் கடத்துவதற்கான அச்சுறுத்தல் குறித்த 7500 என்ற சிக்னல் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது..

ஏர் இந்தியா விமானத்திற்கு விமானக் கடத்தல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவ்விமானம் புதன்கிழமை காலை ஜெய்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 306 பயணிகளும் பாதுகாப்பாக உள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் நகரிலிருந்து 300 பயணிகளுடன் இன்று (அக்.14) புதுடெல்லி நோக்கி வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்திற்கு நடுவானில் திடீரென பாதுகாப்பு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. விமானத்தை கடத்துவதற்கான அபாயத்தை குறிக்கும் '7500' என்ற சிக்னல் அகமதாபாத் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பப்பட்டதை அடுத்து, விமானம் ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு படையினரால் தீவீர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.