#BIG NEWS : எங்களுக்கு 60 நாள் டைம் கொடுங்க..அப்புறம் பாருங்க மாற்றத்தை - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு..!

 
1

தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “60 நாட்களில் அனைத்தையும் மாற்றி காட்டுவோம். மிகப்பெரிய நிர்வாக மாற்றம் இருக்கும். பல்வேறு துறைகளில் 35% வரை வசூலிக்கப்பட்ட கட்சி நிதி முறையை ஒழித்துள்ளோம். தூர் வாராமல் வாரியதால் பில் போட முடியாது. பினாமி பில் முறையை ஒழிப்போம். தவறுகளை கண்டறிந்து வருகிறோம். விரைவில் மாற்றுவோம்” என்றார்.

தமிழகத்தில் அடுத்த 60 நாட்களில் ஒட்டுமொத்த நிர்வாக அமைப்பிலும் மிகப்பெரிய மாற்றம் கொண்டு வரப்படும் என்றும், பல்வேறு அரசுத் துறைகளில் நிலவி வந்த 35% வரையிலான கட்சி நிதி வசூல் முறை தற்போது முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இனிமேல் நீர்நிலைகளைத் தூர் வாராமல் வாரியதாகப் பொய் பில் போட முடியாது என்றும், பினாமி பில் முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். 

முந்தைய நிர்வாகத் தவறுகள் அனைத்தும் தற்போது தீவிரமாகக் கண்டறியப்பட்டு வருவதாகவும், மிக விரைவில் தூய்மையான மற்றும் நேர்மையான நிர்வாக மாற்றத்தை மக்கள் மத்தியில் தவெக அரசு சாத்தியப்படுத்திக் காட்டும் என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.