#BIG NEWS : 'பாபநாசம்', 'பில்லா 2' படங்களின் தயாரிப்பாளர் ஜார்ஜ் பயஸ் தாராயில் காலமானார்..!!

 
Q

மூத்த திரைப்படத் தயாரிப்பாளர் ஜார்ஜ் பயஸ் தாரையில் தனது 63-வது வயதில் காலமானார். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பணியாற்றிய ஒரு அனுபவமிக்க நிபுணரின் இழப்பால் தென்னிந்தியத் திரையுலகம் துயரத்தில் ஆழ்ந்துள்ளது.

தமிழ், மலையாளம், ஹிந்திப்படங்களில் இணை தயாரிப்பாளராகவும், நிர்வாகத் தயாரிப்பாளராகவும் பணியாற்றிய இவர், 'கிரீடம்', 'பில்லா 2', 'பாபநாசம்' போன்ற படங்களில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நாளை அக்., 8ஆம் தேதி அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஜார்ஜ் பயஸ் தாராயில், தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தித் திரைப்படத் துறைகளில் இணை தயாரிப்பாளராகவும் , எக்ஸிகியூட்டிவ் தயாரிப்பாளராகவும் பல பிரம்மாண்ட படைப்புகளுக்கு பின்னணியில் தூணாக இருந்து செயல்பட்டுள்ளார். இவர் 2002 ஆம் ஆண்டு நிர்வாகத் தயாரிப்பாளர் மற்றும் லைன் புரொடியூசராக தனது திரைப்பயணத்தை தொடங்கினார். நிர்வாகத் தயாரிப்பாளராக அறிமுகமான இவர், ஷோபனா, நாசர் அப்துல்லா மற்றும் பிரீத்தி விஸ்ஸா ஆகியோர் நடித்த 'மித்ர்: மை ஃப்ரெண்ட்' படத்துடன் இணைந்திருந்தார். அதன் பின் அஜித் நடத்த கிரீடம், பில்லா 2 ஆகியவற்றின் நிர்வாக தயாரிப்பாளராக இருந்தார். பின் பாபநாசம் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார்

இவரது மறைவு செய்தி வெளியானதும், திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்