#BIG NEWS : முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தவெகவில் இணைந்தார்..!

 
1

முன்னாள் சபாநாயகர் ப.தனபால். இவரது மகன் லோகேஷ் தமிழ்செல்வன். இவர் பி.காம் எம்பிஏ படித்துள்ளார். இவர் அதிமுக ஐடி பிரிவு அவிநாசி தொகுதி பொறுப்பாளராக பதவி வகித்துள்ளார். லோகேஷின் மனைவி லோ. தங்கபூர்ணிமா. இந்த தம்பதிக்கு நிகேஷ் தமிழ்செல்வன், பத்மேஷ் தமிழ்செல்வன் என இரு மகன்கள் உள்ளனர். சேலத்தில் பிறந்த லோகேஷ் தமிழ்செல்வன் ஐடி நிறுவனம் நடத்தி வருகிறார்.


இவரது மாமனார் நாமக்கல் அருணாச்சலம் என்பவர். எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் அதிமுகவின் அமைச்சராக இருந்தவர். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் தான் இவருக்கு தமிழ்ச்செல்வன் என்ற பெயர் வைத்தார். இவரது திருமணம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த நிலையில் தற்போது அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளார்.வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், தனது தந்தை எம்எல்ஏவாக இருந்து வரும் அவிநாசி தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு வழங்கினாராம். 2 மாதங்களில் என்ன நடந்தது என தெரியவில்லை. தற்போது சப்தமின்றி லோகேஷ் தவெகவில் இணைந்துவிட்டார்.