#BIG NEWS: டாக்கா விமான நிலையத்தில் பெரும் தீ விபத்து..!!

 
Q Q
வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள ஹஷ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள சரக்கு முனையத்தில் இன்று பிற்பகல் 2.15 மணியளவில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. விமான நிலைய தீயணைப்பு படையினர் மற்றும் விமானப்படையினரும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, அணைக்கப்பட்டது.
இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் காரணமாக, சுற்று வட்டாரப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. தீ காரணமாக, டாக்கா விமான நிலையத்தில் அனைத்து விதமான விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.