#BIG NEWS : ரசிகர்கள் ஷாக்..! கேம் ஆஃப் த்ரோன்ஸ்' புகழ் நடிகர் மைக்கேல் பேட்ரிக் காலமானார்..!
Apr 9, 2026, 14:02 IST1775723526698
பிரபல ஹாலிவுட் தொடரான 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' மற்றும் 'ப்ளூ லைட்ஸ்' போன்ற புகழ்பெற்ற தொடர்கள் மூலம் உலகெங்கும் ரசிகர்களை கவர்ந்த ஹாலிவுட் நடிகர் மைக்கேல் பேட்ரிக், தனது 35-வது வயதில் காலமானார்.
இவர் கடந்த 3 ஆண்டுகளாக மூளை மற்றும் முதுகுத் தண்டில் உள்ள தசைகளை இயக்கும் நரம்பு செல்கள் பாதிக்கப்பட்டதால் ஏற்பட்ட பிரச்சனைக்கு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், அவர் உடல்நிலை மோசமானதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி , நேற்று உயிரிழந்ததாக அவர் உறவினர்கள் தெரிவித்தனர்.இவரது மறைவு இந்திய ரசிகர்கள் உட்பட ஒட்டுமொத்த திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



