#BIG NEWS : விஜய்க்கு எதிராக திரும்பிய ஆதாரம்? "குழந்தை பிடிக்கிறவர்களுக்கு வேற என்ன தெரியும்?" - மாரிதாஸ் ட்வீட்!
யூடியூப்பர் மாரிதாஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதாவது தவெக வெளியிட்டுள்ள இந்த வீடியோ தன மொத்த ஆப்பு என தெரிவித்துள்ளார். ஒரு எம்எல்ஏவை ரகசியமாக தங்க வைத்து, ஆதரவு கடிதம் எழுதி வாங்கியுள்ளனர். அதனை இவர்களே ரகசியமாக வீடியோ எடுத்து ரகசிய சந்திப்பு என வெளியிட்டுள்ளார்கள். குழந்தை பிடிக்கிறவர்களுக்கு வேற என்ன தெரியும்.
இந்த வீடியோ குதிரை பேரம் நடந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. அமமுக கட்சிக்கே தெரியாமல் டிடிவி தினகரன் தரப்பு எம்எல்ஏவிடம் எழுதி வாங்கியுள்ளனர். சட்டம் இதுக்கே என்ன பண்ணும் தெரியுமா? இப்போ நீதிமன்றம் போங்க என பதிவிட்டுள்ளார். அதே போல் மற்றொரு பதிவில், விசிக ஆதரவு கொடுத்தல் கூட பதவி ஏற்பு அழைப்பு தற்போது இருக்காது. குதிரை பேரம் நடந்துள்ளதை தெளிவுப்படுத்திய பின்பு தான் ஆளுநர் அழைப்பு இருக்கும்.
118 எம்எல்ஏக்கள் அல்ல 125 ஆதரவு இருந்தால் கூட குதிரை நடத்ததுக்கான சின்ன ஆதாரம் கிடைத்தல் கூட பதவி ஏற்பு என்பது நிறுத்தி வைக்கப்படும் என்பது தான் சட்டம் என தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார் யூடியூப்பர் மாரிதாஸ். அவருடைய இந்த பதிவு அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது. அதோடு தவெகவினரும் இப்பதிவுக்கு கீழ் ஏராளமான கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.
இதனிடையில் நேற்று இரவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், "குதிரை பேரம் செய்கிறது தவெக. இதெல்லாம் தூய சக்தி செய்யும் வேலையா? மோசடி சக்தி இது. ஒரேயொரு எம்எல்ஏ என்றால் இளக்காரமா? நாங்கள் இதையெல்லாம் பார்த்து இருக்க வெண்ணெய்கள் இல்லை. தவெக அளித்துள்ள அனைத்து கட்சிகளின் ஆதரவு கடிதங்களையும் ஆளுநர் ஆய்வு செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது VCK ஆதரவு கொடுத்தால் கூட தற்போது பதவி ஏற்புக்கு அழைப்பு இருக்காது. குதிரை பேரம் நடந்துள்ளது.. அதை தெளிவு படுத்தி பின் தான் ஆளுநர் அழைப்பு உண்டு.
— Maridhas (@MaridhasAnswers) May 9, 2026
118 அல்ல 125 வைத்திருந்தால் கூட அங்கே குதிரை பேரம் நடந்ததற்கான சின்ன ஆதாரம் இருந்தால் கூட நிறுத்தி வைக்கப்படும் என்பது தான்…

