#BIG NEWS : எவர்கிரீன் நடிகை மனோரமா மகன் பூபதி காலமானார்..!!
Oct 23, 2025, 14:04 IST1761208464598
எவர்கிரீன் நடிகை மனோரமா 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மறைந்தார். இவரது ஒரே மகன் பூபதி(70), உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். மூச்சு திணறல் பிரச்னையால் அவதிப்பட்ட வந்தார். கடந்த வாரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் தனது அம்மா மனோரமா பயன்படுத்திய கட்டிலிலேயே இன்று காலை இவரது உயிர் பிரிந்தது.
நடிகர் விசுவின் 'குடும்பம் ஒரு கதம்பம்' படத்தில் அறிமுகமான பூபதி, அதன் பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். மகனுக்காக தூரத்து பச்சை என்ற படத்தையும் மனோரமா தயாரித்தார். ஆனால் எது எடுபடவில்லை. சீரியல்கள் சிலவற்றிலும் பூபதி நடித்தார். இவரை திரையுலகில் அறிமுகப்படுத்தி பிரபலமாக்க மனோரமா எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்தன.
பூபதிக்கு ராஜராஜன் என மகனும், அபிராமி, மீனாட்சி என்ற மகள்களும் உள்ளனர். நாளை இறுதி சடங்கு நடக்கிறது.
மனோரமா இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பூபதி உடலுக்கு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பூச்சி எஸ்.முருகன், கருணாஸ் மற்றும் நடிகர் சங்க மேலாளர் தாமராஜ் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.


