#BIG NEWS : இந்தியா கூட்டணியில் திமுக இல்லை: கனிமொழி எம்பி..!!

 
kanimozhi

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மாதம் 20ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைந்த சூழலில், சபாநாயகர் ஓம் பிர்லா அனைத்து எம்பிக்களுக்கும் தேநீர் விருந்து கொடுத்தார். இதனை இந்தியா கூட்டணியில் இருக்கும் கட்சிகள் புறக்கணித்தன. ஆனால் திமுக சார்பாக கனிமொழி மட்டும் தேநீர் விருந்தில் பங்கேற்றார். இதனால் திமுக, பாஜகவுடன் நெருக்கம் காட்டி வருவதாக பேச்சுகள் எழுந்தன.

இதுகுறித்து விளக்கமளித்த அவர், நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்களுக்கான இருக்கையை மாற்றுவது தொடர்பாக பேசவே சபாநாயகரை சந்தித்ததாகவும், இதில் எந்த சர்ச்சையும் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், 'இந்தியா' கூட்டணியில் காங்கிரஸ்தான் உள்ளதே தவிர திமுக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

கனிமொழியின் இந்த பதில் காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாமல் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே இந்தியா கூட்டணி சார்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.