#BIG NEWS : அமெரிக்க ஓபன் முதல் சுற்றிலேயே ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி..!!
24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான நோவாக் ஜோகோவிச், 2026 அமெரிக்க ஓபன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். 25-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் களம் கண்ட அவர், அர்ஜென்டினாவின் மரியானோ நவோனிடம் 7-6(5), 5-7, 4-6, 6-2, 6-1 என்ற 5 செட் கணக்கில் தோல்வியடைந்தார். 2006-ம் ஆண்டுக்கு பிறகு கிராண்ட்ஸ்லாம் தொடர் ஒன்றின் முதல் சுற்றிலேயே ஜோகோவிச் வெளியேறுவது இதுவே முதல்முறையாகும்.
2006-ம் ஆண்டுக்குப் பிறகு கிராண்ட்ஸ்லாம் தொடர் ஒன்றின் முதல் சுற்றிலேயே ஜோகோவிச் தோல்வியடைவது இதுவே முதல்முறையாகும்.
24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஜோகோவிச், அமெரிக்க ஓபனில் 25-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியிருந்த நிலையில், முதல் சுற்றிலேயே வெளியேறியது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

