#BIG NEWS : நாடு முழுவதும் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு..! சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை 2,044 ரூபாயாக உயர்வு..!
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் போர் தொடுத்தள்ளது. இதனால் உலகம் முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. போர் காரணமாக கச்சா வினியோகம் தடைபட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் சிலிண்டர் விலை, நள்ளிரவு முதல் உயர்வு கண்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் ரூ.115 ம், 14.2 கிலோ எடை கொண்ட, வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் ரூ. 60ம் உயர்ந்தது. பு
திய விலையின்படி சென்னையில் வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர், ரூ.928.50 க்கும், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர், ரூ. 2043.50 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இதுவரை 869 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிலிண்டர், இனி 929 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.இதேபோல், வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை 115 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் ஒரு வணிக சிலிண்டரின் விலை 2,044 ரூபாயாகவும், டெல்லியில் 1,883 ரூபாயாகவும், மும்பையில் 1,835 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.முன்னதாக, கடந்த ஒன்றாம் தேதி 30 ரூபாய் விலை உயர்த்தப்பட்ட சூழலில், தற்போதை விலை ஏற்றத்துடன் சேர்த்து வணிக சிலிண்டரின் விலை ஒரே வாரத்தில் 145 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

