#BIG NEWS : முதல்வர் விஜயின் மகிழ்ச்சி அறிவிப்பு..! பயிர் கடன் 100 சதவீதம் தள்ளுபடி!.

 
1

கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.75,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு 100% கடன் தள்ளுபடி. பயிர்க்கடன் தள்ளுபடியால் 14,43,504 விவசாயிகள் பயனடைவர் என முதல்வர் விஜய் அதிரடியாக அறிவித்துள்ளார். முதலில் 50,000 வரை கடன் தள்ளுபடி என அறிவித்த நிலையில் ரூ.75,000 ஆக உயர்ந்துள்ளது. 

 

தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துவிட்டது. கட்சியின் தலைவர் விஜயும் முதல்வராக பொறுப்பேற்றார். அப்போது பயிர் கடன் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் விவசாயிகளுக்கு 50 ஆயிரம் வரை மட்டுமே தள்ளுபடி என கூறியது விவசாயிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. 

 

தேர்தலுக்கு முன்பு தவெக சொன்னது ஒன்று.. தேர்தலுக்குப் பின் வெற்றி பெற்று தவெக அரசு செய்தது ஒன்று என விவசாயிகள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். இந்நிலையில்தான் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற 75 ஆயிரம் வரையிலான பயிர் கடன் 100 சதவீதம் தள்ளுபடி என முதலமைச்சர் விஜய் தற்போது அறிவித்திருக்கிறார். இதற்கு முன்பு 50 ஆயிரம் வரையிலான பயிர் கடன் மட்டுமே 100 சதவீத தள்ளுபடி என அறிவிக்கப்பட்டிருந்தது தற்போது மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.

அனைத்து விவசாயிகளுக்கும் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையும் குறைந்தபட்சமாக  ரூ.35 ஆயிரம் வரையும் பயிர் கடன் தள்ளுபடி என முதலமைச்சர் விஜய் அறிவித்திருக்கிறார். முதலமைச்சர் விஜயின் இந்த உத்தரவால் ஒட்டுமொத்தமாக விவசாயிகளின் ரூ 5932.23 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படவுள்ளது.