#BIG NEWS : முதலமைச்சர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்.. திமுக பதிவு..!

 
1

சிவகங்கையில் டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராடிய வணிகரின் கடையில் காவல்துறையினரே கஞ்சாவை மறைத்து வைத்து, அவரைக் கைது செய்ய முயன்றதாக திமுக தலைமை குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், 

கடந்த காலங்களில் கஞ்சா விற்பவர்களை தேடி பிடித்து வந்த காவல்துறை , Dummy CM Sir ஆட்சியில் கஞ்சா வைப்புத் துறையாக மாறி உள்ளது. 

1000 கோடி மெத் போதை பொருளை கடத்திய போதை கடத்தல் மன்னன் TVK பூபாலனை கைது செய்யாத CM சாரின் ஏவல் துறை, சிவகங்கை திருப்பத்தூர் திருக்காளபட்டியில் டாஸ்மாக்கிற்கு எதிராக போராடிய வணிகரின் கடையில் கஞ்சாவை மறைத்து வைத்து, அவரை கைது செய்ய முயன்றுள்ளது.  குற்றவாளிகளை எல்லாம் Free ஆ தப்பிக்கவிட்டு பொது மக்களை பிடித்து சிறையில் அடைக்க துடிக்கிறது துப்புகெட்ட தவெக அரசு.

ஒருபக்கம் தவெக நிர்வாகி மெத் போதை பொருள் கடத்துகிறார். மறுபக்கம் போலீசாரே கஞ்சா வைக்கிறார்கள். 
இதற்கிடையில் டம்மி CM விஜய் போதை ஒரு ஜாலி என மாணவர்களிடம் பேசுகிறார். இதுதான் தூய சக்தியின் போதை ஒழிப்பு இலட்சணம்.

இதுவா தூய சக்தி என மக்கள் தூ.. தூ.. என துப்புகிறார்கள்.

டாஸ்மாக்கிற்கு எதிராக போராடியதால், காவல்துறையாலேயே கஞ்சா வைக்கப்பட்டு பாதிப்புக்கு உள்ளான சிங்கம்புணரி வணிகருடன் கழகம் உறுதியோடு துணை நிற்கிறது. தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியாகவும், குற்ற வழக்கு பதிவு செய்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறைக்கு பொறுப்பான டம்மி முதல்வர் விஜய் பாதிக்கப்பட்ட வணிகரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.