#BIG NEWS : மகளிர் உரிமைத்தொகை ₹2,000-ஆக உயர்வு: சர்வதேச மகளிர் தினத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

 
1

 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சர்வதேச மகளிர் தினத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், என் அன்புக்கு உரிய உலகை இயக்கும் பேராற்றலான தாய்மார்கள், சகோதரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் இனிய உலக மகளிர் நாள் வாழ்த்துக்கள். தந்தை பெரியார் பெண் ஏன் அடிமையாள் என கேள்வி எழுப்பி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அவரது கொள்கை வழித்தோன்றலாக பெண்களுக்கு சொத்து சமபங்கு உரிமை அளித்து சட்டம் நிறைவேற்றினார் முத்தமிழறிஞர் கலைஞர். அரசுப் பணிகளிலும் இட ஒதுக்கீடு வழங்கினார்.

இத்தகைய பெண்ணினக் காவலர்களின் வழித்தோன்றலாக மகளிர் உயர்வுக்கான ஆட்சியான திராவிட மாடல் அரசை நமது அரசு நடத்துகிறது. பெண்கள் ஓரிடத்துக்கு சுதந்திரமாக சென்று வருவதற்கு விடியல் பயணம். அவர்களுடைய சமூக பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம். பெண்களின் உயர்கல்வியை உறுதி செய்வதற்கு புதுமைபெண், சமையல் சுமையை குறைப்பதற்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்.
 

பாதுகாப்பாக தங்குவதற்கு தோழிகள் விடுதி. தனியார் தொழிற்சாலைகளிலும் அவர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டு மகளிர் வெல்லும் தமிழ்ப் பெண்களாக நமது திராவிட மாடல் ஆட்சியில் வரலாறு படைத்து வருகிறார்கள். அடுத்து அமையவுள்ள திராவிட மாடல் 2.0 ஆட்சியில் மகளிருக்கு வழங்கப்படும் உரிமைத்தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என இப்போதே அறிவித்துள்ளோம்.

அதோடு மூன்று மாதங்களுக்கான தொகையை முன்பணமாகவும், கோடைக்கால சிறப்பு நிதியாக ரூ. 2 ஆயிரம் ரூபாய் தமிழ்நாடு முழுவதும் 1.31 கோடி பெண்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. இதன் மூலமாக மகளிர் மனங்களை மகிழச் செய்தோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் தரமான கல்வியும், உயர் வேலைவாய்ப்புகளும் தன்னிறைவும் அடைவோம். பெண்களை பொருளாதார சுதந்திரம் கொண்வர்களாகவும் உயர்த்துவோம்.

அனைத்துக்கும் மேலாக தமிழ்நாட்டில் உள்ள எல்லா மகளிரையும் சிறந்த உடல்நலன் கொண்டவர்களாக உயர்த்து சமூக வித்தலை இலக்கினை அடுத்த ஐந்து ஆண்டுகளில் உறுதியாக அடைவோம். என்னுடைய இலட்சியக் கனவான ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட தமிழ்நாடு என்பதை நிறைவேற்ற போவது நீங்கள்தான். மீண்டும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய மகளிர் நாள் நல்வாழ்த்துக்கள். இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.