#BIG NEWS : முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு..!!

 
A

சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவின்போது தவெக வேட்பாளர் அசோக் சினோரா, வழக்கறிஞர் விஜயகுமாரை முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தாக்கியதாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

திமுக முன்னாள் அமைச்சரும், துறைமுகம் தொகுதி எம்எல்ஏவுமான சேகர்பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நாளன்று தமிழக வெற்றிக் கழகத்தின் துறைமுகம் தொகுதி வேட்பாளர் சினோரா அசோக் உடன் மோதலில் ஈடுபட்ட விவகாரத்தில் சேகர்பாபு மீது 4 பிரிவுகளில் காவல் துறை வழக்குப்பதிவு.

புகாரையடுத்து முன்னாள் அமைச்சரும் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினருமான சேகர்பாபு மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளில் சென்னை வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.