#BIG NEWS : "விஜய் முதல்வர் ஆக முடியாதோ?" - தவெக கிளை செயலாளர் தீக்குளித்து தற்கொலை முயற்சி..!

 
fire

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்  முதல்வர் ஆக முடியாத சூழல் நிலவி வருவதாக கருதி மனமுடைந்த திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம் அருகே புதுமை கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கியப்பன் (40) தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.இவர் தமிழக வெற்றி கழகத்தின் கிளை செயலாளராக உள்ளார்.


கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, தனது கட்சியின் தலைவர் விஜய் தமிழக முதல்வராக வேண்டி, சுமார் 16 அடி நீளம் கொண்ட வேலை அலகாகக் குத்திக் கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி தனது தீவிரப் பற்றை வெளிப்படுத்தியிருந்தார்.

​இந்நிலையில், விஜய் முதல்வர் ஆக முடியாத சூழல் நிலவி வருவதாக கருதி மனமுடைந்த இசக்கியப்பன், இன்று விபரீத முடிவு எடுத்தார். இதில் பலத்த தீக்காயமடைந்த அவர், தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.