#BIG NEWS : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வாங்கிய ஆதித்யா பிர்லா குழுமம்..!

 
1

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விலைக்கு வாங்கியுள்ளது ஆதித்யா பிர்லா குழுமம்..

குமார் மங்கலம் பிர்லாவின் ஆதித்யா பிர்லா குழுமம், டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம், டேவிட் பிளிட்சரின் போல்ட் வென்ச்சர்ஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பிளாக்ஸ்டோன் இன்வெஸ்ட்மென்ட் ஆகிய நிறுவனங்களை உள்ளடக்கிய கூட்டமைப்பு, ஆர்சிபி அணிக்காக 1.78 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 16 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. அணியின் 100 சதவிகித பங்குகளைக் கையகப்படுத்துவதற்காக, யுகே-டயஜியோ பிஎல்சியின் துணை நிறுவனமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் (யுஎஸ்எல்) உடன் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

முதல் முறையாக கடந்த 2008ம் ஆண்டு ஆர்சிபி அணியை விஜய் மல்லையா உருவாக்கிய பிறகு, இரண்டாவது முறையாக அந்த அணி விற்பனை செய்யப்பட்டுள்ளது. அன்றைய தேதிக்கு 111.6 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழித்து அணியின் உரிமையை விஜய் மல்லையா பெற்றுள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு விஜய் மல்லையா யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் (USL) நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, அதன் உரிமை டியாகோ இந்தியாவுக்கு மாறியது.

அதை தொடர்ந்து தற்போது ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைமையிலான கூட்டமைப்பு,  சுமார் 1.78 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (ஏறத்தாழ ₹16,700 கோடி) ஆர்சிபியை வாங்கியுள்ளது. இதனால் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் அதிக விலைக்கு விற்கப்பட்ட அணியாக ஆர்சிபி உருவெடுத்துள்ளது