#BIG NEWS : ஆதவ் அர்ஜுனா பகீரங்க குற்றச்சாட்டு : திமுக ஆட்சியில் 32 துறைகளில் உதயநிதி, சபரீசனுக்கு சரிபாதி வசூல்..!
சென்னையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது;
திமுக எம்எல்ஏக்கள், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியையும் மீறி கேலிகள், ஒருமையில் பேசும் பேச்சுக்களை பார்த்திருப்பீர்கள். முதல்வர் ஒவ்வொரு நாளும் 5 மணிநேரம் பொறுமையாக அமர்ந்து குறிப்புகளை எடுக்கிறார்.முதல்வர் பேசவில்லை, பேசவில்லை என்று அவருக்கு எதிராக தோற்றத்தை திமுகவினர் உருவாக்குகின்றனர்.அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேசிய பிறகே, முதல்வர் பதிலளித்து பேசுவது மரபு. இதுவரை எந்த முதல்வருக்கும் இல்லாத தைரியம் முதல்வர் விஜய்க்கு இருக்கிறது. அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்பதற்காக சட்டசபை நிகழ்வுகளை நேரலை செய்து வருகிறார்.
4 நாட்களாக சட்டசபையில் நடந்த நிகழ்வுகளை விசிக தலைவர் திருமாவளவன் பார்க்க வேண்டும். கொளத்தூர் என்று சட்டசபையில் சொல்லக்கூடாதா? முதல்வர் கட்சி நிதி என்று தான் சொன்னார். அனைத்து கட்சிகளும் இருக்கையில், திமுக மட்டும் ஏன் எழுந்தார்கள். அவங்களுக்கு தெரியும், அனைத்து துறைகளிலும் கட்சி நிதி இருக்கிறது. துறை ரீதியாக ஊழலுக்கு என்று திட்டம் தீட்டியுள்ளார்கள். திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் தனியார் பள்ளி உரிமத்தை புதுப்பிக்க ஒவ்வொரு பள்ளியிடம் இருந்து ரூ.25 லட்சம் நிதி வாங்கியிருக்கிறார்கள். இது பொதுமக்களுக்கு தெரியும். முதல்வரின் உரைக்குப் பிறகு வேறு யாரும் பேச முடியாது. ஆனால், சபாநாயகர் எதிர்க்கட்சி தலைவர் பேசுவதற்கு அவகாசம் தருகிறேன் என்கிறார். கட்சி நிதி, குடும்ப நிதி என்றாலே திமுக தான் என்று அனைவருக்கும் தெரியும். இதை பேசுவதற்கு உதயநிதிக்கு நேர்மையும், துணிச்சலும் இல்லை. வெளிநடப்பு செய்த உதயநிதி செய்தியாளர்களிடம் பேசியதை, சட்டசபையில் பேசியிருக்கலாமே?
32 துறைகளில் தலா 16 துறைகள் என உதயநிதிக்கும், மாப்பிள்ளை சபரீசனுக்கும் பிரித்துக் கொண்டு வசூலித்து, மொத்த அமைச்சர்களும் கொண்டு போய் கொடுத்தார்கள். முதல்வரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சித்தார்கள். அதனால் தான் தோல்வியடைந்தனர். திமுக எங்களின் அரசியல் எதிரி. மக்களுக்கான அரசியலை செய்து வருகிறோம். கூட்டணி கட்சிகளிடம் விளக்கிக் கொண்டு இருக்கிறோம்.
ஆளுர் ஷா நவாஸை தங்களது கட்சிக்கு வருமாறு ஸ்டாலின் நேரடியாக பேசி வருகிறார். இதுதான் பண்ணையார்தனம். ஸ்டாலினின் தூண்டுதலின் பேரில் தான் ஆ.ராசா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் அவதூறு பேசுகின்றனர். ஸ்டாலின் நடிப்பு அரசியலை செய்கிறார், இவ்வாறு அவர் கூறினார்.
#JUSTIN || தி.மு.க. ஆட்சியில் 32 துறைகளில் 16 துறைகளில் சபரீசனுக்கு வசூல் | #AadhavArjuna | #DMK | #Tamilnadu | #Sabareesan | #UdhayanidhiStalin | #PolimerNews pic.twitter.com/F5dix2ynMy
— Polimer News (@polimernews) June 25, 2026
#JUSTIN || தி.மு.க. ஆட்சியில் 32 துறைகளில் 16 துறைகளில் சபரீசனுக்கு வசூல் | #AadhavArjuna | #DMK | #Tamilnadu | #Sabareesan | #UdhayanidhiStalin | #PolimerNews pic.twitter.com/F5dix2ynMy
— Polimer News (@polimernews) June 25, 2026

