#BIG NEWS : பிரபல சின்னத்திரை நடிகர் சஹானா ஸ்ரீதர் காலமானார்..!

பிரபல சின்னத்திரை நடிகர் சஹானா ஸ்ரீதர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. வங்கியில் பணியாற்றிய இவர் ஏராளமான சீரியல்களிலும் நடித்துளளார். பாலு மகேந்திரா மற்றும் கே பாலசந்தர் போன்ற ஜாம்பவான்களுடன் பணியாற்றியுள்ளார்.
இவர், 'விஐபி.', 'ராஜவம்சம்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும், 'சஹானா' தொடரில் நடித்ததால் 'சஹானா' ஸ்ரீதர் என அழைக்கப்பட்டார்.
சில தெலுங்கு மற்றும் தமிழ் படங்களிலும் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ள ஸ்ரீதர், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வள்ளியின் வேலன் என்கிற தொடரில் நடித்து வருகிறார். அதே போல் அன்ஷிகா மற்றும் அர்னவ் விஜய் டிவியில் நடித்து வந்த 'செல்லமா' தொடரிலும் நடித்திருந்தார்.
சென்னை தி. நகர் பகுதியில் வசித்து வந்த அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.
இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவு தற்போது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.