#BIG NEWS : பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட நடிகர் அஜித்தின் கட்-அவுட் சரிந்து விழுந்தது..!

 
1

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷின் இசையில் ஜனரஞ்சகமான ஒரு கமர்ஷியல் படமாக தயாரானது தான் குட் பேட் அக்லி. கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி ஒரு க்ளாஸான படமாக அமைந்தது. அஜித்தை அப்படத்தில் செம க்ளாஸாக எதார்த்தமாக காட்டியிருந்தார் இயக்குனர் மகிழ் திருமேனி.


ஆனால் குட் பேட் அக்லி திரைப்படத்தில் அதற்கு நேர்மாறாக அஜித்தை எந்தளவிற்கு மாஸாக காட்டமுடியுமா அந்தளவிற்கு காட்டியிருக்கின்றார் ஆதிக். அஜித்தின் தீவிரமான ரசிகரான ஆதிக் தான் தன் நாயகனை எப்படியெல்லாம் திரையில் பார்க்கவேண்டும் என ஆசைப்படுவாரோ அதனை மனதில் வைத்தே இப்படத்தை இயக்கியுள்ளார். அதன் காரணமாக தான் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்துள்ளது என்று சொல்லவேண்டும்.


இந்நிலையில் குட் பேட் அக்லி திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனைகளை செய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே கணிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது

குட் பேட் அக்லி ட்ரைலர் வெளியான  24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் 24 மணி நேரத்தில் அதிக பார்வையாளர்களை பெற்ற ட்ரைலர் என்ற சாதனையையும் பெருமையையும் பெற்றுள்ளது அஜித்தின் குட் பேட் அக்லி. இதற்கு முன்பு விஜய்யின் லியோ திரைப்படம் தான் இந்த சாதனையை வைத்திருந்தது. லியோ ட்ரைலர் 24 மணி நேரத்தில் 31 .4 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது. அந்த சாதனையை தற்போது குட் பேட் அக்லி திரைப்படம் முறியடித்துள்ளது.


இந்நிலையில் திருநெல்வேலி PSS மல்டிப்ளெக்ஸ் தியேட்டர் முன்பு ‘குட் பேட் அக்லி’ ரிலீஸை கொண்டாடும் வகையில் பிரம்மாண்டமான மிக உயரமான கட்அவுட் தயாராகி வந்தது. இதனை பல அஜித் ரசிகர்கள் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து சமூகவலைத்தளத்தில் ட்ரெண்ட் செய்து வந்தனர்.

இந்நிலையில் இன்று திடீரென அந்த பிரம்மாண்டமான அஜித் கட்அவுட் சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக .நல்வாய்ப்பாக யாரும் காயமடையவில்லை.