#BIG NEWS : ஜப்பானில் நிலநடுக்கம்: 5.7 ரிக்டர் அளவில் பதிவான அதிர்வு - 22 பேர் காயம்!

 
1

ஜப்பானில் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள ஷிசுவோகா (Shizuoka) மாகாணத்தை மையமாகக் கொண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது. ரிக்டர் அளவில் இது 5.7 ஆகப் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் காரணமாக இதுவரை குறைந்தது 22 பேர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலநடுக்கமானது பூமிக்கு அடியில் சுமார் 41 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA) தெரிவித்துள்ளது.

ஜப்பானின் ஷிசோகா மாகாணத்தில், 40 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தப்பியோட முயன்றவர்கள், படிக்கட்டுகளில் இருந்து தவறி விழுந்து 22 பேர் காயமடைந்தனர்.

ஹமாமட்சு, கியோட்டோ, நாரா, யமனாஷி போன்ற இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், கடைகளின் ஜன்னல்கள் நொறுங்கி, கண்ணாடித் துண்டுகள் சிதறின. கடைகளில் இருந்து புத்தகங்கள் சரிந்து விழுந்தன. அண்டை மாகாணமான ஐச்சியும் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஷிங்கன்சென்னில் புல்லட் ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன. அடுத்த சில நாட்களுக்கு வலுவான நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஜப்பான் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் அமைந்துள்ளது.