#BIG NEWS : உக்ரைன் தாக்குதலில் இந்திய மாலுமிகள் 4 பேர் உயிரிழப்பு..!
Jul 21, 2026, 05:10 IST1784590823000
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீதான ரஷ்யா போர் நான்கு ஆண்டுகளைக் கடந்தும் தொடர்கிறது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், குய்னா - பிசாவ் நாட்டு கொடியுடன், சரக்குக் கப்பல் ஒன்று, உக்ரைனின் ஒடேசா பகுதியில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்டது.
உணவு தானியங்களுடன் புறப்பட்ட இந்தக் கப்பலில், 17 மாலுமிகள் இருந்தனர்; அதில், 5 பேர் இந்தியர்கள். புறப்பட்ட சில மணி நேரத்துக்குள் அந்தக் கப்பல் ஏவுகணை மூலம் தாக்கப்பட்டது. இதில் 4 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர்; மற்றொருவர் காயமடைந்தார். நேற்று நடந்த தாக்குதலில் இந்திய மாலுமிகள் 4 பேர் உயிரிழப்பு, ஒருவர் கவலைக்கிடம்.
சரக்கு கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர்கள் கொல்லப்பட்டதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

