#BIG NEWS : 12 மசோதாக்களுக்கு அதிவேக ஒப்புதல்; எம்.எல்.ஏ-க்களுக்கு புதிய கார் சட்டமும் அமல்!

 
1

தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, முதல் சட்டசபை கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5ம் தேதி துவங்கியது. அன்றைய தினம் 2026-27ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த நாள், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.தொடர்ந்து, செப் 8ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதமும், துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதமும் நடந்தன. அந்தந்த துறை அமைச்சர்கள் பதிலளித்தனர். இந்த சட்டசபை கூட்டத்தொடரில் மாநிலத்தின் வளர்ச்சி, நிதி மேலாண்மை, நகர்ப்புற நிர்வாகம், டிஎன்பிஎஸ்சி, தனியார் பல்கலைக்கழக விவகாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.  


சட்டசபையில் மொத்தம் 13 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. எம்எல்ஏக்களுக்கு கார் வழங்கும் சட்டத்திருத்த மசோதா உள்பட 12 மசோதாக்களுக்கு கவர்னர் அர்லேக்கர் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டம் தொடர்பான ஒரு மசோதா மட்டும் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.இதில் 6 மசோதாக்களுக்கு 4 நாட்களிலும், 5 மசோதாக்களுக்கு 5 நாட்களிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஒப்புதல் அளிக்கப்பட்ட மசோதாக்கள் பின்வருமாறு:

1. நகர் மற்றும் ஊரமைப்பு இயக்ககம் தொடர்பான திருத்தச் சட்ட திருத்த மசோதா

2. எம்எல்ஏக்களுக்கு கார் வழங்குவது தொடர்பான சட்ட மசோதா

3. புதிய முதலீடுகளை ஈர்க்கும் தமிழக முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையச் சட்ட மசோதா

4.டாஸ்மாக் மதுபானங்கள் மீதான மதிப்புக்கூட்டு வரி திருத்த சட்ட மசோதா

5.நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு அதிகாரம் வழங்கும் சட்ட திருத்த மசோதா

6. விவசாய விளைபொருள் சந்தைப்படுத்துதல் (ஒழுங்குமுறை) திருத்த சட்ட மசோதா

7.அரசுப் பணியாளர் தேர்வாணையம் திருத்த மசோதா

8.அரசின் நிதிச் செலவுகளுக்கான தமிழ்நாடு நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மசோதா

9. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் திருத்த மசோதா.

10. ஊராட்சிகள் சட்ட திருத்த மசோதா

11. மாநிலத்தில் தொழில்கள் மற்றும் வணிகத்தை எளிதாக்குவதற்கான திருத்த மசோதா

12. சில துறை சார்ந்த நிதி மற்றும் சட்ட திருத்த மசோதாக்கள்


தற்போது கவர்னர் ஒப்புதல் அளிக்கப்பட்ட மசோதாக்கள், தற்போது சட்டங்களாகிவிட்டன. அவை அனைத்தும் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.


இந்த 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு குறுகிய காலத்திலேயே ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. அதேவேளை, தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்ட மசோதா மட்டும் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த மசோதாவில், தனியார் பல்கலைக்கழகங்களைத் தொடங்குவதற்கான குறைந்தபட்ச நிலப்பரப்பு சென்னையில் 12 ஏக்கராகவும், பிற மாநகராட்சிகளில் 18 ஏக்கராகவும், மற்ற பகுதிகளில் 25 ஏக்கராகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு குறைந்தபட்சம் 100 ஏக்கர் நிலம் தேவைப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் ஆசிரியர் அமைப்புகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். உயர்கல்வியில் தனியார் நிறுவனங்களின் பங்கு அதிகரிப்பதால் ஏழை, கிராமப்புற மற்றும் முதல் தலைமுறை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் இடஒதுக்கீடு பாதிக்கப்படக்கூடும் என அவர்கள் கவலை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது