தமிழ்நாட்டில் பாஜகவுக்கு பெரிய வீழ்ச்சி - காயத்ரி ரகுராம்

 
gayathri raghuram annamalai gayathri raghuram annamalai

தமிழ்நாட்டில் பாஜகவுக்கு பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

annamalai and gayathri

நாளுக்கு நாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் நடிகை காயத்ரி ரகுராமுக்கும் இடையேயான வார்த்தை போல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.  நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தொடர்ந்து அக்கட்சியின் மாநில   தலைவர் அண்ணாமலைக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.  சமீபத்தில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை பாதிக்கப்பட்ட பெண்களுக்காக சக்தி யாத்திரையை வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்குவதாக  அறிவித்தார்.  அத்துடன் தொடர்ந்து தமிழக அரசியலில் அண்ணாமலையின் நடவடிக்கைகள் குறித்து விமர்சித்து வருகிறார்.

gayathri rahuram

இந்நிலையில் நடிகையும், முன்னாள் பாஜக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக கூட்டணியின்றி இபிஎஸ் அதிமுக போட்டியிடுகிறது.  பாஜகவிடம் கேட்காமல் வேட்பாளரை அறிவிக்கிறார் ஓபிஎஸ். சில தமிழ்ப் படங்களைப் பார்த்துவிட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் வெறும் பஞ்ச் டயலாக்குகள் மட்டுமே கொடுக்கிறார், ஐ.பி.எஸ். அது காமெடி மாறி வருகிறது.  






2024தேர்தலில் கூட்டணி இல்லாமல் பாஜக தனித்து போட்டியிடும் என்பது முதல் பஞ்ச் டயலாக். 25இடங்களில் வெற்றி பெறுவார் என்பது இரண்டாவது பஞ்ச் டயலாக். ஈரோடு இடைத்தேர்தல் மூலம் கூட்டணி கட்சி என்ன செய்ய முடியும் என்று காட்டிய பிறகு, இப்போது பேனர் பிரச்சனைக்காக டெல்லிக்கு ஓடிப்போன ஐ.பி.எஸ். இப்பவே இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட ஐபிஎஸ் தனது பலத்தையும் வளர்ச்சியையும் காட்ட கூட்டணி கட்சி வாய்ப்பு அளித்துள்ளது. ஆனால் அவரால் வேட்பாளரை அறிவிக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு பெரிய வீழ்ச்சி.. " என்று குறிப்பிட்டுள்ளார்.